Skip to main content

தேரழுந்தூர் கம்பர் கழகம் - 2ம் நாள் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன

 தேரழுந்தூர் கம்பர் கழகம் - புதுக்கோட்டை கம்பன் கழகம் ஆகிய இரு கழகங்களின் சார்பில் நடைபெறும் தேரழுந்தூர்  "கம்பன் விழா" வின்   இரண்டாம் நாள் (08/01/2023) மாலை நேர நிகழ்ச்சிகள் "திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அரங்க"த்தில்   திரு.மாரி. பன்னீர் செல்வம் அவர்கள் "கம்பன் இசை" பாட, திரு.சீ.செளரிராஜன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். புதுக்கோட்டை கம்பன் கழக இணைச் செயலாளர்கள் திரு.ரா.கருணாகரன்,  திரு.வெ.முருகையன் ஆகியோர் முன்னிலை வகிக்க, "ஆன்மீக முரசு"சென்னை திரு.மை.பா.நாராயணன் அவர்கள் "நம்பிக்கை நாயகன்" எனும் தலைப்பில் தேனுரை வழங்கினார். 

 இதனைத் தொடர்ந்து  இரா. வைஷ்ணவி வரவேற்புரை வழங்க,

 புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர், தொழிலதிபர், திருப்பணி செம்மல் திரு.M. இராமச்சந்திரன் அவர்கள்  தலைமையேற்க,

   புதுக்கோட்டை கம்பன் கழக இணைச்செயலாளர் திரு.காடுவெட்டி குமார் அவர்கள் முன்னிலை வகிக்க, 

"தமிழ்ச்சுடர்" சென்னை திரு.கி. சிவக்குமார் அவர்கள் நடுவராகப் பொறுப்பேற்க,

 "கம்பராமாயணத்தின் நிலைத்த புகழுக்குப் பெரிதும் காரணம், காகுத்தன் கதையா? கம்பன் கவியா?"  என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. 

இதில் "காகுத்தன் கதையே" என்னும் அணியில் புதுக்கோட்டை கம்பன் கழக கூடுதல் செயலாளர் புதுகை பாரதி அவர்களும், தேரழுந்தூர் கம்பன் கழக செயலாளர் முனைவர். முத்துலெட்சுமி பாலு 
அவர்களும், 

"கம்பன் கவியே" என்னும் அணியில் புதுக்கோட்டை கம்பன் கழக செயலாளர் திரு. ரா.சம்பத்குமார் அவர்களும், சென்னை மாணவர் கம்பர் கழக செயலாளர் திருமதி.பத்மா மோகன் அவர்களும், வெகுசிறப்பாக வாதிட்டனர். 

    நிகழ்ச்சியின் முடிவில் திரு.ஆமருவி தேவநாதன் அவர்கள் நன்றி கூற,

   பட்டிமன்ற நிகழ்ச்சியினை புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் செயலாளர் திரு. ரா. சம்பத் குமார் அவர்கள் தொகுத்து வழங்கினார். 

நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட  பாஜக தலைவர் திரு.அகோரம் அவர்கள், எழுத்தாளர் நாகை முகுந்தன் அவர்கள், மயிலாடுதுறை பிரபல உணவகமான "அன்ன மித்ரா" திரு.சரவணன் அவர்கள், மயிலாடுதுறை வியாபாரிகள் சங்க தலைவர் திரு. A. தமிழ்ச்செல்வன் அவர்கள், புதுயுகம் தொலைக்காட்சி திரு. பரணி அவர்கள், மயிலாடுதுறை பாஜக மாவட்ட செயலாளர் திரு.பாலு, கோவில்பட்டி கம்பன் கழக நிர்வாகி திரு. சரவணச் செல்வன்  உள்ளிட்ட பிரமுகர்களுடன் உள்ளூர், வெளியூர் பொதுமக்களும் திரளாக  கலந்து கொண்டனர். 
இத்துட.ன்  2022 ஆண்டின் கம்பன் கழகத்தின் இரண்டு நாள் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன.