குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம்!

குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக நடைபெற்ற கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் நடைபெற்றது.
கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த திருமணம் தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில வைரலாகி வருகிறது. புகைப்படத்தில், மஞ்சிமாவும் கௌதமும் வெள்ளை நிறத்தில் உடையணிந்து புன்னகையை வெளிப்படுத்தியுள்ளனர்.
தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்தபோது நண்பர்களாக பழகிய கவுதம் மஞ்சிமா இருவரும் பின்னாளில் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதில் கவுதம் தனது காதலை சொன்னபோது இரண்டு நாட்களுக்குப் பிறகு மஞ்சிமா அதை ஏற்றுக்கொண்டதாகவும், அதன்பிறகு இருவரும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தெரிவித்து தற்போது திருமணத்தில் முடித்துள்ளனர்.