Skip to main content

திருநீறிடுதல் அவசியம் என்ன?

விபூதி என்றால் ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். `பிறப்பு, இறப்பு என்னும் கொடுமையான பிறவிச் சுழலிலிருந்து விடுவித்து, ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து திருநீறு' என்று போற்றுகிறது திருஞானசம்பந்தரின் திருநீற்றுப் பதிகம். திருநீறு `விபூதி' என்றும் அழைக்கப்படும். 

திருநீறறுப்பதிகம் - ஞானசம்பந்தர்

மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு, துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு, சமயத்திலுள்ளது நீறு
செந்தூர்வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே ” 

சிவபெருமானை நினைத்து விபூதி பூசும்போது, 3 கோடுகளாக பூசவேண்டும். இவ்வாறு பூசுவதை திரிபுண்டரம் என்று கூறுவர்.
மூன்று கோடுகளாக விபூதி பூசுவதின் இரகசியம் என்னவென்றால், மும்மலங்களை அழிப்பதுடன், கடந்த காலங்களிலும் செய்கின்ற பாவங்களும் நீங்கி, இறுதியில் மோட்சம் கிடைக்கும்.
திருநீறிடுதல் என்பது மாசில்லாத சுத்தமான நிலையின் அடையாளமாகும்.