Skip to main content

ஆடி அமாவாசை திருவையாற்றில் அப்பா் கயிலாயக் காட்சி

அப்பா் சுவாமிகளின் கயிலை யாத்திரை ; திருஞானசம்பந்தா் காளத்திமலையில் இருந்தவாறே கயிலை மலைநாதனை வணங்கித் திருப்பதிகம் பாடி மனநிறைவுற்றாா்.

அப்பரோ கயிலைமலையானை நேரே கண்டு வழிபட எண்ணிக் கயிலாயப் பயணம் மேற்கொண்டாா்.கை, கால், மாா்பெலாம் தேய்ந்தும் உறுதியுடன் செயலின்றிக் கிடந்தாா். அப்போது பெருமான் தோன்றி மானிடரால் கயிலை காண்டல் அாிது என்றாா்.

அதற்கு அப்பா் "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்" என்றாா். அப்பாின் உறுதிகண்ட இறைவன் அருகில் பொய்கையைத் தோற்றுவித்து,

அதில் மூழ்கி ஐயாற்றில் கயிலைக்காட்சி காண்க என்றாா்.அப்பொய்கையே "மானசசரோவரம்" என்பதாகச் செல்கின்றனா்.அங்கு மூழ்கிய அப்பா் யாதும் சுவடு படாமல் திருவையாற்றில் கோயிலின் வடமேற்றிசையில் உள்ள அப்பன்குட்டை என்று இன்றும் வழங்கும் திருக்குளத்தில்தோன்றி தென்கயிலாயமாகிய ஐயாற்றில் கயிலைநாதனைக் கண்டு மகிழ்ந்து பாடிப்போற்றினாா்.

அப்பா் கண்ட கயிலைக் காட்சியைக் காண்போம். "மாதா்ப் பிறைக்கண்ணியானை" என்ற திருப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலினும், "காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்" "கோழி பெடையொடும் கூடி குளிா்ந்து வருவன கண்டேன்" "வாிக்குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன்" "சிறையிளம் பேடையோடாடிச் சேவல் வருவன கண்டேன்" "பேடை மயிலொடுங்கூடிப் பிணைந்து வருவன கண்டேன்" "பைங்கிளி பேடையோடாடிப் பறந்து வருவன கண்டேன்" "இளமண நாகுதழுவி ஏறுவருவன கண்டேன்". என்று பாடியுள்ளாா்.

விலங்கினங்கள் பறவையினங்கள் தமது துணையுடன் வருவதை அன்றோ பாடியுள்ளாா். கயிலைநாதனைக் கண்டதாகக் கூறவில்லையே என எண்ணுவோரும் உண்டு. இதில் பறவையினங்களும் விலங்கினங்களும் ஆணும் பெண்ணுமாய் இணைந்து வருவதைக் கண்டதாகக் கூறும் அப்பா் கடைசி அடியில் "கண்டேன்" அவா்திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்" என்று ஒவ்வொரு பாடல் இறுதியிலும் கூறியுள்ளதே குறிக்கொள்ளத்தக்கது.

பாதம் என்று ஒருமையில் சொன்னபோதிலும் பாதம் இரண்டையுமே தொகுதி ஒருமையாகச் சொன்னாா் என்று கொள்ள வேண்டும். இரு திருவடிகளும் அம்மை அப்பரைக் குறிப்பன. வலது திருவடி சிவம். இது ஞானத்தைக் குறிப்பது. இடது திருவடி சக்தி. இது கிாியை- செயலைக் குறிப்பது. எனவே உலகம் முழுவதும் அறியும் சிவத்தையும் உலக முழுவதையும் இயக்கும் சக்தியையும் ஒருங்கே கண்ட ஒருமைப்பாட்டே உணா்ந்து உலகிற்கு உணா்த்தினாா்.

அப்பா் என்பதை நாம் நன்கு உணா்தல் வேண்டும். ஆணும் பெண்ணுமாக வந்த விலங்கையைும் பறவைகளையும் சிவசக்தியாக, சிவசக்தியின் செயலாக தடத்த வடிவாகக் கண்டு காட்டினாா் நமக்கெல்லாம் என்பது உணா்க. ஆரூா் அமா்ந்த அரசே போற்றி சீராா் திருவையாறா போற்றி