சாட் ஜி.பி.டி சாதனையை முந்திய சத்குருவின் 'மிராக்கிள் ஆப்

கோவை ஈஷா யோக மையத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த மஹாசிவராத்திரி விழாவில் சத்குருவின் ‘மிராக்கிள் ஆப் மைண்ட்’ இலவச தியான செயலி அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரை இல்லாத சாதனையாக, வெளியான 15 மணி நேரத்தில் 10 லட்சம் பதிவிறக்கங்களை கடந்து சாட் ஜி.பி.டியின் சாதனையை முந்தியுள்ளது.
இச்செயலி வெளியான 24 மணி நேரத்திற்குள் இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா, ஹாங்காங், ஜெர்மனி, கென்யா, UAE உள்ளிட்ட 20 நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், ரஷ்யம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இச்செயலி வெளியாகியுள்ளது.
வெறும் 7 நிமிடத்தில் செய்து முடித்து விடக்கூடிய இந்த தியானம், முறையான வழிகாட்டுதல்களுடன் இந்த செயலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் எளிமை மற்றும் பயனுள்ள வடிவமைப்பால் அனைவரையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் மன நலத்திற்கு தியானமே பிரதான தீர்வு என்பதை உணர்த்தும் வகையில் புதிய அடையாளமாக இச்செயலி அமைந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுவது இச்செயலியின் மற்றொரு சிறப்பம்சம்.
தியானம் மட்டுமன்றி சத்குருவின் விரிவான ஞானத்தை, பார்வையை, வழிகாட்டுதல்களை இது வழங்குகிறது.
லிங்க் இதோ:
https://isha.sadhguru.org/in/en/miracle-of-mind