சென்னை திரும்புவோருக்காக சிறப்பு புறநகர் ரயில் சேவை

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோருக்காக சிறப்பு புறநகர் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. தாம்பரம் – காட்டாங்குளத் காட்டாங்குளத்தூர்
இடையே திங்களன்று அதிகாலை 4 மணி முதல் சிறப்பு புறநகர் ரயில் இயக்கப்படும். ஜன.20ல் காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்துக்கு அதிகாலை 4.00, 4,30, 5.00, 5.45, 6.20க்கு சிறப்பு ரயில்கள் புறப்படும். ஜன.20ல் தாம்பரத்தில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு அதிகாலை 5.05, 5.40 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.`