‘சிக்கந்தர்’ படம் ரம்ஜான் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘சிக்கந்தர்’ படம் ரம்ஜான் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சஜித் நதியத்வாலா தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கிடையில், படத்தின் டைட்டில் டிராக் டீசர் நேற்று வெளியான நிலையில், முழு பாடல் இன்று வெளியாகவுள்ளது.