Skip to main content

சர்வதேச மகளிர் தினம் – மார்ச் – 8

சர்வதேச மகளிர் தினம் – மார்ச் – 8

ஒரு காலத்தில் ”பெண்ணினம் என்றாலே ஆண்களுக்கு அடுத்துதான்” என உலகம் முழுமையுமே இருந்தது. அதனையும் தாண்டி, பெண்கள் தங்கள் வாழ்வியலுக்காக வெளியில் பணிபுரிந்து பொருளீட்டும் நிலையை மெல்ல மெல்ல எட்டினர்.  பெண் பணியாளர்களுக்கு அனுமதி கிடைத்ததேயொழிய, அதிலும் ஆண் – பெண் பேதம் தலைதூக்கியது. ஆம்!…. ஆண்களை விட பெண்களுக்கு மிகவும் குறைவான ஊதியமே கொடுக்கப் பட்டது. இதனை எதிர்த்து அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரச்சினைகள் தலையெடுக்கத் தொடங்கின.

அதன் உச்சமாக 1857 ஆம் ஆண்டு, அமெரிக்க தேசம் முழுமையும் பெண் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து, ஆண்களுக்கு நிகராக தங்களுக்கும் ஊதியம் வேண்டுமென பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர்  பல ஆண்டுகளாகவே தொடர்ந்து மாநாடுகள் , ஆர்ப்பார்ட்டங்கள் என தொடர்ந்து கொண்டேதான் இருந்தது .

இதனையடுத்து, சர்வதேசத்திலும் பெண்களுக்கு அங்கீகார மளிக்கும் விதமாக ஒரு சிறப்பு தினத்தினை அறிவிக்க வேண்டும் என கோரிக்கையும் வலுக்கத்தொடங்கியது.

1910 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் அலெக்ஸாண்டிரா கெலன்ரா  தீர்மானம் நிறைவேற்றி பிரகடனம் செய்தார்.

1911 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஆடுகள் சிலவற்றில் “மகளிர் தினம்” கொண்டாடப்பட்டது.

ஆயினும் உலகம் முழுவதும் ஒன்றிணைந்து, மார்ச் 8 ஆம் தேதியை ”சர்வதேச மகளிர் தினமாக” கொண்டாட முடிவுசெய்ததன் பின்னணியில் ஒரு சம்பவம் உண்டு.

முதல் உலகப்போரின் போது (1917) ”ரஷ்யாவில் போர் வேண்டாம்…தேவை … அமைதியும் ரொட்டியும்தான் “ என மார்ச் 8 ஆம் தேதி பெண்கள் போராட்டம் தொடங்கினர். (ஜூலியன் காலண்டர்படி அது பிப்ரவரி 23.)

ஆகவே அந்த மார்ச் 8 ஆம் தேதியையே “சர்வதேச மகளிர் தினமாக” அறிவிக்கப்பட்டு நூறாண்டுகளைக் கடந்தும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அனைத்து மகளிருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள் !!!

பெண்களைப் போற்றுவோம். பெருமைகள் காப்போம்.