ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்

ஹாலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக், அவதார், டெர்மினேட்டர் என சில வெற்றிப் படங்களை இயக்கி பல ஆஸ்கர் விருதுகளை பெற்றவர் என சாதனை படைத்தவர். கனடாவில் பிறந்த இவர் 17 வயதில் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்.
இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது கொடூரமானது. டிரம்ப் ஆட்சியில் அமெரிக்கா ஒழுக்கமான அனைத்து விஷயங்களில் இருந்தும் விலகுவதாகநான பார்க்கிறேன். அமெரிக்கா எதனுடன் இணைந்திருக்கவில்லை என்றால், அது வரலாற்று ரீதியாக நிற்க முடியாமல் போய்விடும். இது மிக மோசமான யோசனையாக மாறிவிடும்.
தினந்தோறும் வரும் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் முதல் பக்கத்தை முழுமையாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்கிறேன். அதற்குக் காரணம், அது என்னை வேதனைப்பட வைக்கிறது.நியூசிலாந்து நாளிதழ்களில் சற்று வேறுமாதிரியாக உள்ளது. அங்கு அவர்கள் 3வது பக்கத்திலாவது போடுகிறார்கள்.
ட்ரம்ப்பின் முகத்தை தினமும் நாளிதழின் முதல் பக்கத்தில் பார்க்க விரும்பவில்லை. இது மீண்டும் மீண்டும் கார் விபத்தை பார்ப்பது போல் உள்ளது.நியூசிலாந்து நாட்டில் உடனடியாக குடியேற கேட்டு இருக்கிறேன். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குடியெபர்ந்து விடுவேன்