இளம் எழுத்தாளர்களுக்கு இந்திய அரசு வழங்கும் வாய்ப்பு..!

பாரதப்பேரரசின் 75 ஆவது சுதந்திரதினத்தினை முன்னிட்டு, 30
வயதிற்கு உட்பட்ட இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய
அரசு ஒரு திட்டத்தினை அறிவித்துள்ளது.
இந்திய கலாச்சாரம், பண்பாடு, ஒருமைப்பாடு, இலக்கியவளம் தழுவிய
கட்டுரைகள் , நாடகங்கள் ஆகியவற்றை இளம் எழுத்தாளர்கள் மூலம்
சிறந்த படைப்பாக்கங்களை வெளிகொணரும் வகையில் திட்டம் அமையும்.
இத்திட்டத்தின்படி, இளைஞர்களின் படைப்புகள் புத்தகமாகவும்
வெளியிடப்பட்டு, அதற்காக 10 சதவீத காப்புரிமையும் வழங்கப்படவுள்ளது.
இதற்கென ஊக்கத்தொகை, சிறப்பு பயிற்சி ஆகியனவும் உண்டு. அவ்வாறு
ஆக்கப்படும் புத்தகங்கள் அடுத்தாண்டு ஜனவரி 12 (இளைஞர் தினம்) அன்று
வெளியிடப்படுகிறது.
இதில் இணைந்து தங்களின் படைப்புகளை இணையதளத்தின்
வாயிலாக பதிவேற்றம் செய்தால் போதுமானது. தேசிய சிந்தனையுள்ள
இளம் தலைமுறையினருக்கு மத்திய அரசு வழங்கும் இந்த வாய்ப்பு
மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்குவதுடன் ஆரோக்கியமான மனவளம்
கொண்ட தலைமுறை உருவாகும் என்பதில் ஐயமில்லை.
இதற்கான இணைய தள முகவரி: innovateindia.mygov.in/yuva/