Skip to main content

நாகேஸ்வரராவ் மறைந்த தினம் இன்று!

41ம் ஆண்டு நடிக்கத் தொடங்கிய நாகேஸ்வர ராவ் தெலுங்கில் 250 படங்களில் நடித்து சூப்பர்ஹிட் ஹீரோவாக விளங்கியவர். தெலுங்குத் திரை வானின் நிரந்தர உச்சநட்சத்திரம். சுமார் 71 ஆண்டுகளாக பல தலைமுறைகளைக் கடந்து நடித்து சாதனை புரிந்தவர். ‘இத்தாரு மித்ருடு’ என்ற படத்தில் நாட்டிலேயே முதன் முதலாக இரட்டை வேடங்களில் நடித்த இவர், ‘நவராரி’ என்ற படத்தில் 9 வேடங்களில் நடித்துள்ளார். இது தமிழில் சிவாஜி கணேசன் நடித்த ‘நவராத்திரி’ என்ற படத்தின் தெலுங்கு தழுவல் ஆகும்.

தமிழிலும் ஓர் இரவு,எங்க வீட்டு மகாலெட்சுமி, மாதர்குல மாணிக்கம்’, “கல்யாணபரிசு’, “மாயா பஜார்’ , “பூங்கோதை’,தேவதாஸ், பெற்ற தாய் , மச்ச ரேகை, அலாவுதீனும் அற்புத விளக்கும் உட்பட 26 படங்களில் நடித்துள்ளார். சிறந்த ஒரு பண்பாளர். இவர் சிவாஜிகணேசனின் நெருங்கிய நண்பர். சிவாஜியை வாடா, போடா என்று அழைக்கும் அளவுக்கு உரிமையுள்ள உற்ற நண்பர்.

தெலுங்குத் திரையுலகம் சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டதில் நாகேஸ்வர ராவ் முக்கியப் பங்கு வகித்தார்.

பிரபல நடிகர் நாகார்ஜுன் இவரது மகன்தான்.