Skip to main content

நடிகர் சிரஞ்சீவிக்கு "வாழ்நாள் சாதனையாளர் விருது"

நடிகர் சிரஞ்சீவிக்கு, சினிமா மற்றும் சமூக தொண்டுகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப்பட்டது. லண்டன் தலைமை நிலையமாகக் கொண்ட ‘Think Tank Bridge India’ அமைப்பு, ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் இந்த விருதை வழங்கியது. இவ்விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், தூதர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் நவேந்து மிஸ்ரா, சோஜன் ஜோசப், பாப் பிளாக்மேன் ஆகியோர் விருதை வழங்கி கவுரவித்தனர்.