நடிகர் விஜயுடன் பிரதீப் ரங்கநாதன் சந்திப்பு

பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து, 'டிராகன்' படக்குழுவினருடன் விஜய்யைச் சந்தித்திருக்கிறார். 'டிராகன்' படத் தயாரிப்பாளரும், விஜய்யின் 'G.O.A.T' படத் தயாரிப்பாளருமான அர்ச்சனா கல்பாத்தியும் இவர்களுடன் விஜய்யைச் சந்தித்திருக்கிறார்.
விஜய்யைச் சந்தித்தது குறித்து பிரதீப், " 'கலக்குறீங்க ப்ரோ' தளபதியிடமிருந்து வந்த அந்த வார்த்தை எனக்குள் எவ்வளவு மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தியது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். உங்களின் பாராட்டு வார்த்தையும், எங்களுக்காக நீங்கள் ஒதுக்கிய நேரத்திற்கும் நன்றி. 'சச்சின்' பட ரீ-ரிலீஸ்காக காத்திருக்கிறேன்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.