பழனி குடமுழுக்கு விழா - யாகசாலை பூஜை

பழனி முருகன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. வருகிற 27ஆம் தேதி காலை 8 மணி முதல் 9 மணி வரை மலைக்கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
குடமுழுக்கு விழாவையொட்டி மலைக் கோயிலில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு வேத மந்திரங்களை சிவாச்சாரியார்கள் ஓதி வருகின்றனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி மலை கோயில் 64 மிராஸ் பண்டாரங்கள் சண்முக நதியில் இருந்து சண்முக நதி தீர்த்தத்தை யானை முன்னே வர ஊர்வலமாக மலை கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். இன்று மாலை மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சன்னதி திரையிடப்பட உள்ளது.
அதை ஒட்டி இன்று மதியம் வரை மட்டுமே பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்ய முடியும் என்பதால் இப்போது பழனிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.