T20WorldCup2022 போட்டிக்கான இந்திய ஆடவர் அணி அறிவிப்பு.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பையில் சொதப்பியதால், வீரர்களை தேர்வு செய்யும்போது காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றிருக்கிறது. இறுதியில் தற்போது அணியை அறிவித்துள்ளனர்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹார்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், அக்சர் படேல், அஸ்வின், சஹல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.
ரிசர்வ் வீரர்கள்: முகமது ஷமி, ஷ்ரேயஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சஹார்.
ஷ்ரேயஸ் ஐயர் பவுன்சருக்கு எதிராக தொடர்ந்து சொதப்பி வருகிறார். இவருக்கு பவுன்சருக்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் வாய்ப்பு கொடுத்துவிட்டு, சாம்சனை புறக்கணித்துள்ளனர்.