தைப்பூசத்திருநாளின் சிறப்பு - கவர்னர் ரவி

விசேஷமிக்க தைப்பூசத்திருநாளில், நம் அனைவருக்கும், குறிப்பாக இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள நமது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் முருகப் பெருமானின் நிரந்தர ஆசீ கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்.
இன்றைய நாளில், தீமைக்கு எதிராக முருகப் பெருமான் பெற்ற தீர்க்கமான வெற்றியையும், அதர்மத்தை வென்று தலையாய தர்மத்தை மீட்டெடுத்ததையும் நாம் கொண்டாடுகிறோம்.
தீமையை அழிக்க முருகப்பெருமான பயன்படுத்திய தெய்வீகமான வேல், நீதியின் வலிமை, துணிச்சல் மற்றும் வாழ்க்கைச் சவால்களை வெல்லும் உறுதியை வெளிப்படுத்தி பக்தி, சுய ஒழுக்கம் மற்றும் அவற்றைப் பிரதிபலிப்பதன் மூலம் நம்மைத் தூய்மைப்படுத்திக்கொள்ளத் தூண்டுகிறது.
முருகப்பெருமான், 2047 -ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை முழுமையாக வளர்ச்சியடையச் செய்யும் நமது தேசிய நோக்கத்துக்கான நமது பாதையை ஒளிரச் செய்வாராக, மேலும் அதற்குத் தேவையான வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் நீடித்த வளத்தை நமக்கு அருள்புரிவாராக!
- கவர்னர் ரவி