உலக கால்பந்து போட்டி

ஒரு விளையாட்டின் இறுதி ஆட்டமென்பது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அனைத்து அங்க அடையாளங்களையும் நேற்று நடந்த போட்டி கொண்டிருந்தது.
சர்வதேச அளவில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் கண்டு களித்த ஒரே போட்டியாக இது இருப்பதற்கான வாய்புகள் அதிகம்.
கோப்பையை இறுதியாக அர்ஜெண்டினா வெல்ல De Maria, Messi, Martinez என்று மூவரும் பங்கு போட்டுக் கொண்டாலும், ஃபிரான்ஸ் ஒரு உலகத்தரம் வாய்ந்த அணி, அது எந்தவிதத்திலும் தனக்கான வாய்ப்பை விட்டுக் கொடுக்காத அணி என்பதை. நிரூபித்ததில் மாப்வே-வுக்கு அதிக பங்குண்டு!! தோல்வி அடைந்தாலும் நாட்டின் அதிபர் மைதானத்தில் வந்து அந்த மாப்வே என்ற போர்வீரனை ஆரத்தழுவி தன் வாழ்த்துகளை தெரிவித்தது ஒரு பரிபூரண தருணம்.
இந்த தொடரில் அதிக கோல் அடித்த விருதும் சிறந்த ஆட்டக்காரருக்கான விருதுமான தங்க காலணி விருது மாப்வேவுக்கு வழங்கபட்டது
கடந்த உலக கோப்பையில் பைனலில் சிறந்த ஆட்டம் ஆடி பிரான்சுக்கு கோப்பையினை பெற்று கொடுத்த அவர் அப்பொழுது அறிமுக வீரருக்கான விருதை வென்றார், அப்பொழுது அவருக்கு 18 வயது ஆகியிருந்ததுஇப்பொழுது கோல்டன் ஷூ விருதை வென்றிருக்கின்றார், அவரின் இறுதி ஆட்ட ஹாட்ரிக் அழியா சாதனைகளில் ஒன்று
மெஸ்ஸி, ரெனால்டோவிற்கு பின்பான கால்பந்து உலகம் மாப்வே- வின் கால்களுக்குள் கண்டுண்டு கிடக்கப் போவது உறுதி!
உலகமே கண்டு வியந்த ஒரு திருவிழாவை பாலைவன தேசத்தின் சிறிய நகரத்தில், உலகமே வியக்கும் வண்ணம் வெகு சிறப்பா நடத்திக் காட்டிய அரபுலகின் இளவரசன் கத்தாருக்கும் நம் மனமார்ந்த பாராட்டுகள்..