Skip to main content

”யானை” – மு.பழனிவாசன் ( பகுதி 1)

மமூத்:

யானை ஒரு காட்டுவிலங்காக அறியப்பட்டாலும்வரலாற்றின் தொடக்ககாலம் முதலே அது மனிதகுலத்திற்கு மிகவும் நெருக்கமான தோழமைமிகுந்த உயிரினமாகவே விளங்கி வருகிறது என்பதை நாம் நன்கறிவோம்.

    பல ஆண்டுகளுக்கும் முன்னர் மாமூத்” என்கிற இனம் தற்போதைய யானை குடும்பத்தின் முன்னோடியாக (எலிபண்டா குடும்பம்சொல்லப்படுகிறது.

மாமூத் இனம் தற்போதைய யானைகளை விட நினைத்துப் பார்க்கவே திகிலூட்டும் தோற்றத்துடன் இருந்திருக்கின்றன என்பது ஆங்காங்கு கிடைக்கப்பெற்ற படிமங்களை ஆய்வு செய்த வல்லுனர்களின் தரவுகளின் மூலம் அறியமுடிகிறது.  அவ்வாறு கிடைக்கபெற்ற படிமங்களில் தற்போதைய சீனாவின் முக்கியமான சேங்குவா” நதிக்கரையில் கிடைக்கப்பெற்ற படிமமே அளவில் பெரியதென்று கூறுகிறார்கள்.  

    சேங்குவா நதிக்கரையில் கிடைக்கப்பெற்ற மாமூத்தின் படிமமானதுஉயரம் 4.7 மீட்டர்நீளம் மீட்டர் உடையதாகவும்அதன் தந்தம் மட்டுமே மீட்டருக்கும் மேலே நீண்டிருந்திருக்கக்கூடும் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதுமேலும்சுமார் முதல் டன் எடையுள்ளதாகவும் இருந்திருக்கக்கூடும் என்றும்இவை மட்டுமின்றி பொதுவாக பிற மாமூத் இனத்தினைப்போலவே கடும் குளிரையும் தாங்கும் வகையில் அதன் உடல் முழுமையும் அதிக ரோமங்கள் நிறைந்து இருந்திருக்கக்கூடும் என பதிவு செய்யப்பட்டுள்ளதுஅப்படியானால்எத்தகைய பிரமாண்டமாக இருந்திருக்கும் என எண்ணிப்பார்த்தாலே தலைசுற்றுகிறதுஇத்தகைய உயிரினம் இயற்கை மாறுபாடுகளாலோ அல்லது வேறு காரணங்களாலோகிட்டத்தட்ட டைனோசர் இனம் போல்ஏறத்தாழ 10,000 ஆண்டுகளுக்கும் முன்னர் முற்றிலும் அழிந்துபோயிருக்கிறதுஅந்த இனத்தின் குடும்பமரபுகளின் வழிவந்தவையே நாம் காணும் யானை இனம்”.