”யானை” – மு.பழனிவாசன் ( பகுதி 2)

(யானையைப் பற்றிய முந்தைய கட்டுரையில், அதன் மூதாதை இனமான ”மமூத்” முதல் நம் தமிழகத்தின் சங்ககாலத்தில் யானையின் பெருமைகள் வரை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக…)
மன்னர்களும் யானைகளும்:
“உலகமகாவீரன்” என்று சொல்லப்பட்டு, இந்தியாவின் வடமேற்குப்பகுதிவழியாக ஊடுருவிய, கிரேக்க நாட்டு மன்னன் ”அலெக்ஸாண்டர்” தன் படையெடுப்பின்போது போர்க்களத்தில் இந்திய மன்னர்களின் யானைப்படையை கண்டு அஞ்சினான் என்பது வரலாறு. எப்படி ”ஆடுகள், மாடு
தமிழகத்தில் சோழர்கள் காலத்தில் “யானைப்படை” பெரும் பங்களிப்பு நிக்ழத்தியுள்ளது. மாமன்னன் ராஜராஜசோழனின் ஆணைக்கிணங்க இமயம் வரை படை நடத்திச்சென்ற அவனது மகன் ராஜேந்திர சோழன் இமயம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியுள்ளான். அவன் கடல் கடந்து சென்று இன்றைய தாய்லாந்து, வியட்நாம், இந்தோனே
தமிழகத்தின் சேர, பாண்டிய பல்லவ மன்னர்களும்கூட யானையை கெளரவித்து, அவற்றை பேணிப்பாதுகாத்திருக்கின்றனர் என்பதும் கண்கூடு.
யானைகளும் கோவில்களும்:
ஆன்மீகத்துடன் கணித அறிவியலும் தொடர்புடைய “ஜோதிட சாஸ்திரம்” ஒரு கட்டத்தில் எழுச்சியுற்றபோது, ஒருவரின் ஜாதகத்தில் ”கஜகேசரி யோகம்” என்கிற ஒன்று பிரதானமாக விளங்கியது. இன்றும் கூட அது நடைமுறையில் இருந்து வருகிறது. அதாவது ”யானைகள் கூட்டத்தில் ஒரு சிங்கம்போன்று” என்று குறிப்பிடப்படுகிறது. இதற்கென யாகங்களும் பூஜைகளும் செய்யப்படுகிற வழக்கங்கள் உருவாகியுள்ளன. இதன் அடிப்படையில் இந்த யோஒகம் வலுவாக இருப்பவர்கள் கோவில்களுக்கு யானைகளை தானமாக வழங்குவதும் உண்டு. தமிழ்த்திரையுலகின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தஞ்சை, திருவானைக்காவல் உள்ளிட்ட பல கோவில்களுக்கு யானைகளை தானமாக வழங்கியுள்ளார். அன்னதானம், வஸ்