Saturday, March 14, 2026
HomeUncategorized14 மாநிலங்களில் பெட்ரோல் - டீசல் மீதான வாட் வரி குறைப்பு இல்லை

14 மாநிலங்களில் பெட்ரோல் – டீசல் மீதான வாட் வரி குறைப்பு இல்லை

மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ள நிலையில், 22 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாட் வரியை குறைத்துள்ளன. ஆனால் தமிழகம், ஆந்திரா  உள்ளிட்ட 14 மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்படவில்லை. மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.5 என்ற அளவிலும், டீசல் மீதான கலால் வரியை ரூ.10 என்ற அளவிலும் குறைத்தது. இதனை அடுத்து இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது. கலால் வரியை குறைத்த மத்திய அரசு, மக்கள் மேலும் பயனடையும் வகையில் மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

அதன்படி 24 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளது. ஆனால் 14 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாட் வரியை குறைக்கவில்லை. கர்நாடக மாநிலம் பெட்ரோல் விலையை அதிகபட்சமாக ரூ. 13.35 குறைத்துள்ளது. புதுச்சேரி ரூ. 12.85, மிசோரம் ரூ. 12.62 என்ற அளவில் குறைத்துள்ளது. கர்நாடக அரசு டீசல் விலையை ரூ. 19.49 என்ற அளவிற்கு குறைத்துள்ளது.

ஆனால், மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்கம், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, மேகாலயா, அந்தமான், ஜார்கண்ட், ஒடிசா, சட்டீஸ்கர், பஞ்சாப் மற்றும் பஞ்சாப் ஆகிய 14 மாநிலங்கள் தங்களின் வாட் வரியை குறைக்கவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments