Tuesday, March 10, 2026
HomeUncategorizedதிரைத்துறைக்கு வந்து 17 ஆண்டு நிறைவு - கொண்டாட்டத்தில் அனுஷ்கா

திரைத்துறைக்கு வந்து 17 ஆண்டு நிறைவு – கொண்டாட்டத்தில் அனுஷ்கா

நடிகை அனுஷ்கா, இவர் தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். சினிமாவுக்கு இவர் வந்து 17 வருடங்கள் ஆகிறது. 

இதையொட்டி அனுஷ்கா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ”நான் 17 ஆண்டுகளாக நடித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைய பேர் இதை நீண்ட பயணம் என்கின்றனர். ஆனால் இது மிகச் சிறியது. நன்றாக உழைத்தால்தான் கதாநாயகிகள் சினிமா துறையில் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியும். 

அந்த நம்பிக்கையோடுதான் நான் ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தேன். நான் எத்தனை படங்களில் நடித்தாலும் அருந்ததி படம் தான் நம்பர் ஒன். எவ்வித நடிகையாக இருந்தாலும் அது போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு சவால்தான். என  தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments