நடிகர் கார்த்தி, பிரியாமணி நடித்து அமீர் இயக்கத்தில் 2007ல் வெளியான ‘பருத்திவீரன்’ திரைப்படம் இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் கிராமிய இசையுடன், இளையராஜாவின் குரலில் “அறியாத வயசு” உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பிரியாமணி சிறப்பான நடிப்புக்காக தேசிய விருது பெற்றார். இந்நிலையில், நடிகர் கார்த்தியின் சினிமா பயணமும் 18 ஆண்டுகளை நிறைவு செய்ததை அவரது ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
