ஹோண்டா என்.எஸ் 125 எல்.ஏ (Honda NS125 LA) விரைவில்!
ஹோண்டா என்.எஸ் 125 எல்.ஏ என்ற ஸ்கூட்டர் மாடலுக்கு இந்தியாவில் காப்புரிமை பதிவு செய்யதுள்ளது. ரெட்ரோ வடிவிலான இந்த ஸ்கூட்டர் சீனா உள்பட சில சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது
இதில் 124cc சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 9.5 hp பவரையும் 10 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். ஸ்மார்ட்போன் இணைப்புடன் கூடிய டி.எப்.டி டிஸ்ப்ளே, டயரில் காற்றழுத்தம் உள்ளதை கண்காணிக்கும் அமைப்பு உள்பட பல அம்சங்கள் இதில் இருக்கின்றன. இந்த புதிய ஸ்கூட்டர் இந்தியாவில் எப்போது சந்தைப்படுத்தப்படும் என்ற விவரம் விரைவில் வெளியாகும்.