கருப்பு நிற நிஸான் மேக்னைட் குரோ எடிஷன்- NISSAN MAGNITE KURO
நிசான் நிறுவனம் தன்னுடைய மேக்னைட் காரில் ஒரு புதிய குரோ எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
"குரோ" என்றால் ஜப்பானிய மொழியில் கருப்பு என பொருள். பெயருக்கு ஏற்ப முழுக்க முழுக்க கருப்பு வண்ணத்தில் மேக்னைட் எஸ்யூவி அடிப்படையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.
கேபின், டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல், கன்சோல், கூரை, முன்புற கிரில், பம்பர், அலாய் வீல்கள் என அனைத்தும் கருப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 71ஹெச்பி பவரை வெளிப்படுத்தும். மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் உள்ளது. இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வேரியண்ட் அதிகபட்சமாக 98 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும். இதில் மேனுவல் அல்லது சி.வி.டி கியர் பாக்ஸ் உள்ளது.
டுயல் டிஜிட்டல் ஸ்கிரீன், அர்காமிஸ் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ-டிம்மிங் வசதியுடன் கூடிய ரியர் வியூ மிரர், கிளைமேட் கண்ட்ரோல், பின்புற இருக்கைகளுக்கு ஏசி வெண்ட்கள் உட்பல பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. தொடக்க ஷோரூம் விலை சுமார் ₹8.3 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டாப் வேரியண்ட் 1.0 லிட்டர் சி.வி.டி சுமார் ரூ.10.86 லட்சம். ரூ.11 ஆயிரம் செலுத்தி காரை முன் பதிவு செய்து கொள்ளலாம்.