ஸ்ரீரங்கத்தில் அரங்கனுக்கு நடக்கும் அனைத்து விழாக்களும் 10 நாட்களே நடக்கும். மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா மட்டும் 22 நாட்கள் நடக்கும்.
இதனாலேயே இது பெரிய திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. மார்கழி பெரிய திருநாள் மட்டுமே, உற்சவர் ஸ்ரீ நம்பெருமாளுக்கும், மூலவர் ஸ்ரீரெங்கநாத பெருமாளுக்கும் சேர்த்து நடத்தப்படும் உற்சவம் என்பது மற்றொரு சிறப்பு.
ஆழ்வார்கள் தமிழில் இயற்றிய நாலாயிர திவ்ய பிரபந்தமும், சம்ஸ்க்ருத வேதத்திற்கு நிகரானது என அடியவர்கள் அறிவதற்காகவே, அரங்கன் முன்னின்று நடத்திக் காட்டும் தமிழுக்கான திருவிழா, தமிழ் வேத விழா இது.
நம்பெருமாள் 20 நாட்களும் மண்டபத்தில் ஆழ்வார்கள், ஆசார்யர்கள் முன்னிலையில் எழுந்தருளி நாலாயிர திவ்ய பிரபந்தம் கேட்க தனியாக நேரம் ஒதுக்கினார். அரையர்கள் மூலம் இதைக் கேட்டு மகிழ்கிறார்.
வரும் 31-ம் தேதி இவ்விழா தொடங்குகிறது.
படம்: அரையர் சுவாமிகள் அபிநயம்.

