Monday, March 23, 2026
HomeUncategorizedரயில் மோதி மூன்று யானைகள் பலி!

ரயில் மோதி மூன்று யானைகள் பலி!

மேற்கு வங்காளத்தில் ரயில் மோதி மூன்று யானைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்காளம் மாநிலத்தின் பஸ்சிம் மிட்னாபூர் மாவட்டத்தில் பனஸ்தாலா என்ற ரயில் நிலையம் உள்ளது ஜார்க்கண்ட் இன் தால்மா காட்டில் இருந்து யானைகள் கூட்டமாக ரயில் பாதை வழியாக வந்தன. 

அப்போது யானைகள் வனஸ்தாலா அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது காரக்பூர் நோக்கி சென்ற ஜன்ஷதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் எதிர்பாராத விதமாக யானைகள் மீது மோதியது. இதில் மூன்று யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. 

விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானைகளின் உடலை அப்புறப்படுத்தியதை அடுத்து ரயில்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments