Thursday, February 5, 2026
HomeUncategorizedகோல்டன் எபிக் கரகாட்டக்காரன்- 37 ஆண்டுகள் நிறைவு! வேற லெவல் வெற்றி!

கோல்டன் எபிக் கரகாட்டக்காரன்- 37 ஆண்டுகள் நிறைவு! வேற லெவல் வெற்றி!

தமிழ்நாட்டில் சினிமாவுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு .அதுவும் கிராமத்து படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். பிளாக் அண்ட் ஒயிட் முதல் இன்றைய காலகட்டம் வரை கிராமத்து படங்களுக்கு தனி ரசிகர்கள் எப்போதும் உண்டு. இப்பொழுது எல்லாம் ஒரு படங்கள் வெளியானால் 10 நாட்கள் திரையரங்கில் ஓடுவதே பெரிய சவாலாக உள்ளது. ஆனால் அன்றைய காலகட்டத்தில் ஒரு படம்  மாதக்கணக்கில் ஏன் வருட கணக்கில் கூட ஓடி வசூலை வாரி குவித்து விடும் அப்படிப்பட்ட ஒரு படம் தான் கரகாட்டக்காரன்.

 அந்த வகையில் 37 ஆண்டுகள் ஒரு திரைப்படம் வெற்றிகரமாக மக்கள் மனதில் நிற்கிறது என்று சொன்னால் அது சாதாரண விஷயம் இல்லை. அந்த வகையில் கரகாட்டக்காரன் படம் எபிக் கிளாசிக் திரைப்படம் என்று சொல்லலாம். இந்த படத்தை இப்போது டிவியில் போட்டாலும் ரசிகர்கள் பார்க்க தவறுவதில்லை. இந்த படத்தில்  காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்திற்குமே ஒரு காம்போவாக இருக்கும். 

 

எத்தனை படத்தில் ஹீரோவாக ராமராஜன் நடித்திருந்தாலும் கரகாட்டக்காரன் ராமராஜன் என்று சொன்னால் தனி மவுசுதான்.
ஒரு படத்தின் வெற்றிக்கு தேவையான காதல், போட்டி, தாய் பாசம், சென்டிமென்ட், பிரிவு, ரொமான்ஸ், கிராமத்து வில்லன் என்று அனைத்தும் கலந்து இந்த படத்தின் வெற்றிக்கு தூணாக நின்றுள்ளது.

 1989 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அந்த காலகட்டத்திலேயே 5 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தில் இடம்பெற்று இருந்த “மாங்குயிலே பூங்குயிலே, ஊரு விட்டு ஊரு வந்து” உள்ளிட்ட பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக இருந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் செந்தில், கவுண்டமணி காம்போ இந்த படத்தில் சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருக்கும்.

karakatakaaran

 அதுவும் வாழைப்பழ காமெடி, சொப்பன சுந்தரி  காமெடிகள் இன்றளவும் ட்ரெண்டாக இருந்து வருகிறது. இப்படி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து இன்றைக்கும் பேவரட் படமாக இருந்து 37 ஆண்டுகளை கடந்து இருக்கிறது என்று சொன்னால் அது சாதாரண விஷயம் இல்லை. இந்த படத்தினை ரசிகர்கள் இன்றும் ஷேர் செய்து பட குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
இந்த திரைப்பட திரைப்படம் இன்னும் பல ஆண்டுகள் மக்கள் மனதில் நிற்க வேண்டும் என்று மெட்ராஸ் மிக்சர் வெப்சைட் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments