Home Uncategorized 3வது முறையாக மோடி பிரதமர் ஆக பதவியேற்பு

3வது முறையாக மோடி பிரதமர் ஆக பதவியேற்பு

நாளை(ஜூன்9) இரவு 7:15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் ஆக பதவியேற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற் கின்றனர்.

முன்னாள் பிரதமர் நேருக்கு பிறகு, தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைக்க உள்ளது. விழாவில் பங்கேற்க பல நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், விழாவில் பங்கேற்க டில்லி வர உள்ள உலக தலைவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.

இதன்படி பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே மாலத்தீவு அதிபர் முகமது முயிசு சீஷெல்ஸ் துணை அதிபர் அஹமது அபிப் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா மொரிஷீயஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா பூடான் பிரதமர் ஷெரீங் டோப்கே ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Exit mobile version