Saturday, March 21, 2026
HomeUncategorized4 மாவட்டங்களில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு

4 மாவட்டங்களில் நாளை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை(டிச.17) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் டிச. 3, 4 ஆகிய நாள்களில் கனமழை பெய்து, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

 பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

இதனிடையே, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நிவாரண உதவித் தொகை வழங்குவதற்கான அரசாணை செவ்வாய்க்கிழமை (டிச.13) வெளியிடப்பட்டது.

 சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் உள்ள மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூா் வட்டங்கள் முழுமையாகவும் மற்றும் திருப்போரூா் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து, நிவாரண உதவித் தொகை வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கும் பணி அண்மையில் தொடங்கியது.

 இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை(டிச.17) ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 மிக்ஜம் புயல் வெள்ள நிவாரணத் தொகைக்கான டோக்கன் விநியோகப் பணியினை மேற்கொள்ளும் பொருட்டு ரேஷன் கடைகள் இயங்கும் என  உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments