Tuesday, May 12, 2026
Homeசெய்திகள்45 ஆண்டுகள் அரசியல் அனுபவம்.. சபாநாயகராக மகுடம் சூடும் ஜே.சி.டி. பிரபாகர்!

45 ஆண்டுகள் அரசியல் அனுபவம்.. சபாநாயகராக மகுடம் சூடும் ஜே.சி.டி. பிரபாகர்!

தமிழக அரசியல் வரலாற்றில் பல தலைமுறைகளைக் கடந்த ஒரு மூத்த ஆளுமையாகத் திகழும் ஜே.சி.டி. பிரபாகர், தற்போதைய நவீன தலைமுறை வாக்காளர்கள் நிறைந்த நகர்ப்புற ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றுத் தனது அரசியல் ஆளுமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.

அஇஅதிமுக-வில் எம்.ஜி.ஆர் காலத்திலேயே முக்கியத்துவம் வாய்ந்த மாநில எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளராகப் பணியாற்றிய இவருக்கு, 1980 சட்டமன்றத் தேர்தலின் போது வில்லிவாக்கம் தொகுதியில் எம்.ஜி.ஆரே நேரில் வந்து வாக்குச் சேகரித்தது ஒரு வரலாற்று நிகழ்வு.

அந்த நள்ளிரவுப் பிரச்சாரத்தில், “எனக்கு ஒரு மகள் இருந்திருந்தால் அவளைப் பிரபாகருக்கே மணமுடித்துக் கொடுத்திருப்பேன்; அந்த அளவுக்கு அவர் நல்லொழுக்கமும் தூய்மையான தொண்டர் உள்ளமும் கொண்டவர்” என்று எம்.ஜி.ஆரால் மனதாரப் பாராட்டப்பட்டவர்.

நமக்கும் பரிச்சயமானவரும், லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவருமான இவர், கடந்த 45 ஆண்டுகால அரசியல் பயணத்தில் எவர் மீதும் காழ்ப்புணர்ச்சி காட்டாமல், பொது வாழ்வில் கண்ணியத்தையும் நேர்மையையும் ஒருங்கே கடைப்பிடித்து வருகிறார்.

1980-இல் எம்.ஜி.ஆர், 2011-இல் ஜெயலலிதா ஆகியோரைத் தொடர்ந்து, இப்போது 2026-இல் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியில் ‘ஜென்-ஜி’ தலைமுறை இளைஞர்களின் ஆதரவோடும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள இவரது அனுபவம், தற்போது தமிழகச் சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு மகுடம் சூட்டப் போகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments