Monday, March 16, 2026
HomeUncategorized6.69 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்; இணைய குற்றங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

6.69 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்; இணைய குற்றங்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை

நடப்பாண்டில், கடந்த நவம்பர் 15ம் தேதி வரை 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் கார்டுகளையும் 1,32,000 ஐ.எம்.இ.ஐ., எண்களையும் முடக்கி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்குர் அளித்த பதில் விபரம் இதோ:  

சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான, திட்டங்களின் ஒரு பகுதியாக, சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் செயல்திறனை மேம்படுத்துவதில் முக்கியமாக கவனம் செலுத்தப்படுகிறது. நடப்பாண்டில், கடந்த நவம்பர் 15ம் தேதி வரை 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் கார்டுகளையும், 1,32,000 ஐ.எம்.இ.ஐ., எண்களையும் முடக்கி உள்ளோம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments