67வது தேசிய விருதுகள் 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களுக்காக வழங்கப்பட உள்ளது.
சிறந்த படம் – 2019 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக மோகன்லால் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள *மரைக்கர்* திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் சென்சார் செய்யப்பட்ட இந்த திரைப்படம் கோவிட் நோய் தொற்று காரணமாக ரிலீசாகாமல் உள்ளது
சிறந்த தமிழ் படம் – சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்களுக்கான பட்டியலில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான *அசுரன்* திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
