Thursday, April 9, 2026
HomeUncategorizedதமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு - கட்சியின் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு – கட்சியின் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் கடந்த செப். 9-ம் தேதி ஆலோசனை நடத்தியிருந்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநாடு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநாடு நடைபெறும் நாள் தொடர்பாக, தவெக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துடன், தவெக தலைவர் விஜய் முக்கிய ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநாடு மற்றும் கட்சி குறித்த முக்கிய தகவலை இன்று (செப்.12) காலை 11 மணிக்கு விஜய் அறிவிப்பார் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், தவெகவின் மாநாட்டிற்கு காவல் துறையினர் அனுமதி மறுப்பதாகவும், எனவே மாநாடு தேதியில் மாற்றம் இருக்கும் எனவும் கட்சி நிர்வாகிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments