Sunday, March 15, 2026
HomeUncategorizedடிரம்ப் வெற்றிக்கும், எலான் மஸ்க் பங்கும்...

டிரம்ப் வெற்றிக்கும், எலான் மஸ்க் பங்கும்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மிகவும் வெளிப்படையாகவே டிரம்புக்கு ஆதரவை தெரிவித்தார். டிரம்ப் பிரசாரத்துக்கு 375 கோடி ரூபாய் அளவுக்கு நிதி தர தயார் என்று எலான் மஸ்க் அறிவித்தார். 

தேர்தல் பிரசாரக்களத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமைச்சர் பதவி அல்லது வெள்ளை மாளிகையில் ஆலோசகர் பதவி ரெடி என்று டிரம்பும் தம் பங்குக்கு கொளுத்திப் போட்டார்.

டிரம்பின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து எலான் மஸ்கும் நான் தயார் என்று பதில் அறிவிப்பை வெளியிட மெல்ல, மெல்ல நிலைமைகள் மாற தொடங்கின

வெளிப்படையான ஆதரவு போதாது என்று தினமும் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் டிரம்புக்கு ஆதரவான கருத்துகளை எலான் மஸ்க் வெளியிட்டுக் கொண்டே இருந்தார். அவரின் இந்நடவடிக்கை டிரம்பின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறியது 

தேர்தல் பிரசாரத்தில், அமெரிக்க முன்னேற்றம் பற்றிய தமது எதிர்கால திட்டங்களை டிரம்ப் அறிவித்தாலும் எலான் மஸ்கின் முழு ஆதரவு முக்கிய திருப்பமாக அமைந்தது என கூறலாம். 

தேர்தல் முடிவு வெளியான நாளில் கூட நிமிடத்துக்கு நிமிடம் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவுகளை விடாமல் மாற்றிக் கொண்டே இருந்தார் எலான் மஸ்க்.

டிரம்ப் அதிபராகிறார் என்று முடிவுகள் வெளியான அடுத்த சில நிமிடங்களில் லைக் பொத்தானை இதய வடிவில் சிவப்பாக மாற்றி தமது சந்தோஷத்தை பகிர்ந்திருக்கிறார் மஸ்க். 

பிரசாரக்களத்தில் வெற்றிக்கு எத்தனையோ காரணிகள் இருந்தாலும் சூறாவளியாய் மக்களிடம் ஆதரவு திரட்டியது, 2 முறை நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு, எலான் மஸ்கின் கணக்கிலடங்கா ஆதரவு போன்ற காரணிகள் டிரம்புக்கு வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments