Thursday, March 5, 2026
HomeUncategorizedமாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா தொற்று தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைத்துள்ள நிலையில், முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து வருகிறார். மேலும், மத்திய அரசு வழங்கும் தடுப்பூசி பொருத்து, தொடர்ந்து தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே கொரோனா பரவலின் எண்ணிக்கையும், இறப்பு எண்ணிக்கையும் விரைவில் கட்டுக்குள் வந்து விடும் என்ற நம்பிக்கை துளிர்த்துள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்  கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. காணொலி காட்சி மூலம் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் கொரோனா தொற்றின் நிலை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிகிறார்.

குறிப்பாக தொற்று பரவல் அதிகம் உள்ள 11 மாவட்டங்களின் நிலவரத்தை அறிந்துகொள்வதில் அவர் ஆர்வம் காட்டுவார் என்று கூறப்படுகிறது. அங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆலோசனை வழங்குகிறார்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments