Wednesday, February 4, 2026
Homeகிளாசிக்ஸ்டார்ட் ... ஆக்ஷன். அத்தியாயம். 43. இயக்குனர் .கே.எஸ். கோபால...

ஸ்டார்ட் … ஆக்ஷன். அத்தியாயம். 43. இயக்குனர் .கே.எஸ். கோபால கிருஷ்ணன்- சிறப்பு கட்டுரை!

ஸ்டார்ட் … ஆக்ஷன்.

அத்தியாயம். 43.

இயக்குனர் .கே.எஸ். கோபால கிருஷ்ணன்.

மக்கள் திலகம்.. நடிகர் திலகம் என்றெல்லாம் நடிகர்கள் புகழாரம் சூட்டப் பட்ட வேளையில் இயக்குனர்களில் ‘இயக்குனர் திலகம்’ என்று புகழப் பட்டவர் ..இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள்!

ஒரு திரைக் கதை ஆசிரியராக.. தயாரிப்பாளராக.. இயக்குனராக … கவிஞராக … ஆன்மீகப் பேச்சாளராக..

சாதித்து வாழ்ந்தவர்..

பிறந்த வருடம்..1929..

சிறு வயதிலிருந்து நாடகத் துறையில்  ஈடுபட்டு நவாப் ராஜ மாணிக்கம் நாடக குழுவில் 19 வருடங்கள் கலைப் பணியாற்றி விட்டு…

அவருக்கென்று ‘ஸ்ரீதேவி நாடக சபா’ வை … நிறுவி … ‘தபால்காரன் தம்பி’ மற்றும் ‘எழுத்தாளன்’ ஆகிய நாடகங்களை எழுதி வெற்றி வலம் வந்தவர்!

1960 இல் ‘தெய்வப் பிறவி’ திரைப்படத்தில்… திரைக்கதை – வசனகர்த்தாவாக அவரது பயணம் துவங்கியது !

‘படிக்காத மேதை’..’ ‘குமுதம்’…‘அன்னை’.. என்று பல வெற்றிப் படங்களில் திரைக்கதை வசன கர்த்தாக பணிபுரிந்தார்….

1962 இல் சாரதா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அறிமுகமானார்..!

பொதுவாக திரைப் படங்கள் விஷுவல் மீடியமாக இருக்கும்! அல்லது ஆடியோ விஷுவல் மீடியமாக  இருக்கும்!

தனது திரைக்கதை வசனத்தை பலமாக நம்பிய …. கே.எஸ்..கோபால கிருஷ்ணன் அவர்கள்  தன் திரைப் படங்களை ஒரு ஆடியோ விஷுவல் மீடியமாகத்தான் உருவாக்கினார்!..

அவரது திரைப் படங்களில் யதார்த்தமான நீண்ட வசனங்கள் இடம் பெற்றன!

அழுத்தமான குடும்ப பிரச்சனைகள் படங்களில் வெளிப் பட்டன!..

‘சாரதா’ திரைப்படம் அதற்கு வித்திட்டது! படம் பெரிய வெற்றி பெற்றது .

தன் உடலில் குறைபாடு உள்ள கணவன் மனைவிக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கப் போராடும் ஒரு புரட்சிகரமான மையக் கரு சாரதா திரைப் படத்தில்.. இடம்.. பெற்றிருந்தது! கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில் வெளி வந்த நெஞ்சில் ஓர் ஆலயத்தின் இன்னொரு கோணம்!

ஸ்ரீதர் அவர்களும் கோபாலகிருஷ்ணன் அவர்களும் ஒரு கால கட்டம் ஒன்றாக சேர்ந்து.. பயணித்திருக்கிறார்கள்!.

பிறகு இருவரும் இரு பாணிகளில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்கள்! சாரதாவை தொடர்ந்து 1963 இல்
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கிய ‘கற்பகம்’ திரைப்படம் வெளி வந்தது!

மிகப் பிரமாண்டமான வெற்றி பெற்றது! அந்த திரைப் படத்தில் அறிமுகமான கே.ஆர்.விஜயா அவர்கள் பல காலம் புன்னகை அரசியாக தமிழ் திரையுலகில் வலம் வந்தார்!

கற்பகம் படத்தில் கிடைத்த லாபத்தை வைத்து ‘கற்பகம் ஸ்டூடியோ’ வை … நிறுவி படங்களை தயாரித்து இயக்கும் அளவுக்கு கே எஸ் கோபால கிருஷ்ணன் அவர்கள் உயர்ந்தார்.!

சிவாஜி கணேசன் அவர்களை வைத்து அவர் உருவாக்கிய  ‘கை கொடுத்த தெய்வம்’ பெரிய வெற்றி பெற்றது..
எம்.ஆர். ராதா.. அவர்களை வில்லனாக மையப் படுத்தி… வர்.. இயக்கிய சித்தி … அவரது.. எழுத்து.. மீது.. அவருக்கு இருந்த.. துணிச்சலை நிரூபித்தது.

திருமதி கே ஆர் விஜயா அவர்களின் முதல் படத்தை இயக்கியவர் அவரது நூறாவது படத்தையும் இயக்கினார்! அந்தப் படம் ‘நத்தையில் முத்து’.. அந்தப் படமும் மாபெரும் வெற்றி பெற்றது!

செல்வி.ஜெயலலிதா அவர்களை வைத்து அவர் இயக்கிய ‘வந்தாளே மகராசி’ படத்தில் இடம் பெற்ற  ‘தொட்ட இடம் துலங்க வரும் … தாய்க் குலமே வருக’ என்ற பாடல் இன்றும் ஜெயலலிதா அவர்களின் நினைவாக ஒலித்துக் கொண்டிருக்கிறது..

‘ஆதி பராசக்தி’  என்ற புராண திரைப் படமும் அவரது… படைப்புத் திறனுக்கு ஒரு.. சாதனை சான்றாய் அமைந்தது !

தன் வாழ்நாளில் எழுபது படங்களை இயக்கிய சாதனையாளர் அவர்! அவற்றில் பெரும்பாலான படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடியது!.. 

குடும்ப படங்களுக்கு இலக்கணம் வகுத்தவர்!..தனது வசனத்தால் மக்களின் மனதை வசப்படுத்தியவர்! புரட்சி கரமான மையக் கருத்துக்களை துணிச்சலோடு படமாக்கியவர்!

1992 இல் ஆபாவாணன்.. அவர்கள்.. தயாரிக்க.. கேப்டன்.. விஜயகாந்த் அவர்கள் நடிக்க.. ‘காவியத் தலைவன்’ என்ற படத்தை இயக்கினார்!
அதுவே அவரது கடைசி படமாக அமைந்தது!

 2015  இல்..இயற்கை எய்தினார்

அவர் படங்கள் நம்மோடு சாகாவரத்தோடு வலம் வந்து கொண்டே இருக்கும்.

– இயக்குநர் நித்தியானந்தம்
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments