Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்தவெக மாநாடு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தவெக மாநாடு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மதுரை மாவட்டம் பாரபத்தி  நாளை (ஆகஸ்ட் 21) தவெக- வின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பெரும் அளவில் மக்கள் திரளவுள்ளதால், மதுரை-தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை முன்னிட்டு எலியார்பதி, வளையாங்குளம், காரியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து சிரமம் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ள நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை மாணவர்களும் பெற்றோர்களும் சிரமமின்றி இருக்க செய்யும் என்றும் கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments