Saturday, February 14, 2026
Homeசெய்திகள்கோவை: தோல்வியில் முடிந்த சுற்றுசூழல் பாதுகாப்பு திட்டம்!

கோவை: தோல்வியில் முடிந்த சுற்றுசூழல் பாதுகாப்பு திட்டம்!

கோவை மாநகரில்  உள்ள மக்களில் 55 சதவீதம்   வாகனங்களை பயன்படுத்திக் கொண்டும் மீதமுள்ள 45 சதவீதம் பேர் சொந்த வாகனங்களை வைத்துக் கொண்டும் நாள் தோறும் பயணிக்கின்றனர். 

அந்த நகரில் உள்ள சுற்றுச்சூழல்  மாசினை கட்டுப்படுத்தும் பொருட்டு OFO எனும் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 2,000 சைக்கிள்களை இங்கே பயனாளர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள கோவை மாநகரின் பிரதான இடங்களில் நிறுத்தி வைத்தது. 

இந்த சைக்கிள்களை பயனாளர்கள் இலவலசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்..
 
 இப்படி பயன்படுத்திக் கொள்ளப் பயனீட்டாளர்கள் தங்களது மொபைல்  போனில் அந்த நிறுவனத்தின் ஆப்பை தறவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். 

இந்த செயலியில் பயனீட்டாளர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படும். 

இவர்கள் இந்த சைக்கிளை பயன் படுத்தும்போது அதில் பொருத்தப்பட்டுள்ள பூட்டு இந்த செயலி மூலம் மட்டுமே திறக்க அனுமதிக்கப் பட்ட பின்னர் அந்த எண்ணுடைய  சைக்கிளை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம்..

இந்த சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள GPRS  கருவியானது பயன்பாட்டாளர் அதனை எங்கே கொண்டு செல்கின்றார் என்ற விவரத்தை அந்த நிறுவனத்திற்கு காண்பிக்கும். 

ஆரம்பவிழா வெகு சிறப்பாக நடந்தேறி ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் இந்த சைக்கிள்களை  பயன்படுத்திக் கொண்டனர். 

ஆனால், ஒரு  சில நாட்களிலேயே சில சமூக விரோதிகள் இந்த சைக்கிளில் பொருத்தப்பட்டு இருந்த பூட்டை உடைத்தும் GPRS கருவியை செயலிழக்கச் செய்தும்  எடுத்துக் கொண்டு போய் விட்டனர்.

சிலர் இதையும் தாண்டி, கொண்டு போன சைக்கிளை நிறம் மாற்றி பாரின் சைக்கிள் என்று பேரம் பேசி விற்றும் விட்டனர். சிலர் சைக்கிள்களை கொண்டு சென்று எரித்தும் விட்டனர். 

இரண்டே மாதத்தில் 2,000 சைக்கிள் 200 ஆக சுருங்கிப்போனது. 

இந்த நிறுவனத்தின் நோக்கமே முதற்கட்டமாக கோவையில் இந்த திட்டத்தை துவக்கி பின்னர் படிப்படியாக எல்லா நகரங்களுக்கும் கொண்டு சென்று ஓரளவு சுற்றுச்சூழலை கட்டுப் படுத்தவும், வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், குறைந்த தூரங்களுக்கு மக்கள் சைக்கிள்களை பயன்படுத்தி ‍ஆரோக்கியம்  பெறவும் ஆரம்பிக்கப்பட்டது. 

இப்படி இரண்டு மாதத்தில் இந்த திட்டம் படு தோல்வி அடைந்ததால் அந்த நிறுவனம் இந்த திட்டத்தை தொடர விடாமல் கைவிட்டு விட்டது..

மேலைநாடுகளில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. பயனாளர்கள் இதுபோன்று சைக்கிள்களை சேதப்படுத்துவதும், திருடிக்கொண்டு சென்று தங்களது  சொந்த பயன்பாட்டிற்கும் பயன்படுத்திக் கொண்டது கிடையாது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments