Thursday, February 5, 2026
Homeசெய்திகள்போத்தீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

போத்தீஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள புகழ்பெற்ற போத்தீஸ் ஜவுளிக்கடை நிறுவனத்துக்குச் சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 

வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாக இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போத்தீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகியோரின் இல்லங்களிலும்  சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை மட்டுமல்லாமல், தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை மற்றும் நெல்லையிலும் போத்தீஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது

 ஒரே நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் இந்த அதிரடி சோதனைகள், வணிக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments