தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் விலை உயர்ந்த பாத்திரங்கள் திருடு போனதாக கோவிலின் அர்ச்சகர் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது
இக்கோயிலில் கடந்த 50 ஆண்டுகளாக திருவாசகம் முற்றோதுதல் எனும் நிகழ்ச்சி பக்தர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 12ஆம் தேதி நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது பாதியில் இடை மறித்து பணம் செலுத்தினால் தான் நிகழ்ச்சியை தொடர முடியும் என்று சொல்லி கோவில் நிர்வாகம் “திருவாசகம் ” படிக்க உபய ரசீது கட்டணம் என்று ₹200 வசூலிக்கப்பட்டது.
இதே போல் அன்னதானம் செய்ய விரும்பினாலும் பணம் செலுத்தி தான் ஆக வேண்டுமாம்.
தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கை பக்தர்களின் அதிருப்தியை அதிகரித்துக் கொண்டே போகிறது.

