Image: Meta AI
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் புல்லானி பகுதியில் சேர்ந்தவர் பத்மகுமார் பத்திரப்பதிவு எழுத்தர். இவர் வீட்டில் ஜின்ஜர் வகையை சேர்ந்த பூனையை லல்லு பேபி என்ற பெயரில் ஆசையாக வளர்த்து வந்தார். அதற்கு துணையாக மற்றொரு பூனையையும் வளர்த்து வந்துள்ளார். இந்த பூனைகள், அருகே உள்ள சாஜூ ஜோசப் என்பவர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் பத்மகுமார் உடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று பூனைகள் மீண்டும் பக்கத்து வீட்டுக்கு சென்றன. இதனால் கோபமடைந்த சாஜூ ஜோசப் வீட்டிலிருந்த துப்பாக்கியை எடுத்து பூனைகளை சுட்டுள்ளார். இதில் அவை படுகாயம் அடைந்து சத்தம் போட்டவாறு பத்மகுமார் வீட்டுக்கு ஓடி வந்தன. உடனே அவர் பூனைகளை அங்கமாலியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லல்லு பேபி பூனை உயிரிழந்தது. இது குறித்து பத்மகுமார் அங்கமாலி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சாஜூ ஜோசப் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

