Image: File Image
கையில் பச்சை குத்திருந்ததால் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் இருந்து கல்லூரி மாணவர் நிராகரிக்கப்பட்டார். இதனால் மன வருத்தமடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தத்தனேரி அருள்தாஸ்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவருடைய மகன் யோகசதீஷ் (17). மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
ராணுவத்தில் சேர்ந்த பணியாற்ற வேண்டும் என்று யோகசதீஷ் விரும்பினார். இதற்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டும் வந்தார். இந்த நிலையில் ஈரோட்டில் நடந்த ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் யோகசதீஷ் கலந்து கொண்டார். அப்போது அவரது கையில் பச்சை குத்தியிருந்ததால், அதிகாரிகள் அவரை நிராகரித்ததாக தெரிகிறது. இதனால் கடந்த சில தினங்களாக அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் யோகசதீஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செல்லூர் போலீஸ் சார்பில் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் நிராகரிக்கப்பட்டதே இந்த சம்பத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
Disclaimer: எந்த பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம், மன குழப்பம், தற்கொலை எண்ணம் வந்தாலோ உடனே மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.

