Thursday, February 5, 2026
Homeசெய்திகள்சோமாலியாவுக்கு செல்ல இருந்த சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து! 950 டன் அரிசி,...

சோமாலியாவுக்கு செல்ல இருந்த சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து! 950 டன் அரிசி, 78 டன் சர்க்கரை நாசம்!

 குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே நங்கூரமிட்டு இருந்த சரக்கு கப்பல் நேற்று திடீரென தீப்பிடித்தது. அந்த கப்பலில் அரிசி மற்றும் சர்க்கரை ஏற்ற பட்டு இருந்தது. கப்பலில் பற்றி எரிந்த தீயை அணைக்க மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. கப்பலில் அரிசி அளவு அதிகமாக இருந்ததால் மிகவும் மோசமாகி, கடலின் நடுப்பகுதிக்கு கப்பல் எடுத்துச் செல்லப்பட்டது. எந்திர அறையில் பற்றிய தீ  மற்ற பகுதிக்கும் வேகமாக பரவியது.

 முன்னதாக கப்பலில் இருந்து கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் பற்றி எரியும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த காட்சியை கண்ட உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். கப்பலில் இருந்த 14 ஊழியர்கள் துரிதமாக மீட்கப்பட்டனர்.

 இதற்கிடையே அந்த பகுதியில் ரோந்து வந்த கப்பல் படைக்கு சொந்தமான தீயணைக்கும் கப்பலும் விரைந்தது. எனினும் கப்பல் முற்றிலும் இருந்து நாசமானது. அதில் இருந்த 950 டன் அரிசி, 28 டன் சர்க்கரை அனைத்தும் கடலில் விழுந்தது. கடலில் தீப்பிடித்த சரக்கு கப்பல் சோமாலியாவின் போசாசோவுக்கு செல்ல இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments