Monday, March 16, 2026
Homeசெய்திகள்ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூபாய் ஒரு கோடி நிலம் மோசடி.. இரண்டு பேர்...

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூபாய் ஒரு கோடி நிலம் மோசடி.. இரண்டு பேர் கைது!

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூபாய் ஒரு கோடி நிலம் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆவடி அருகே போலி ஆவணம் தயாரித்து ரூபாய் ஒரு கோடி நிலம் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 ஆவடி அடுத்த பாலவேடு மேலப்பேடு கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் வயது 70 என்பவர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,” எனது தந்தை குப்புசாமிக்கு மேலப்பேடு கிராமத்தில் உள்ள 13 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து எனது சித்தி ரங்கம்மாள் அவரது மகள்கள் புஷ்பா, பார்வதி, கனகவல்லி ஆகியோர் பெயரில் பத்திரப்பதிவு செய்து இருப்பது தெரியவந்தது. இதை பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

 இந்த புகாரின் பெயரில் இன்ஸ்பெக்டர் மாணிக்க ராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் புஷ்பாவின் மகன்களான பாலவேடு மேலப்பேடு திருவிதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த டில்லிபாபு (45) சீனிவாசன் (42) ஆக இருவரும் போலியான ஆவணங்கள் தயாரித்து சாட்சி கையெழுத்து போட்டு இருந்த நில மோசடியில்  ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து டில்லி பாபு, சீனிவாசன் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூபாய் ஒரு கோடி என கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments