நடிகர் அஜித் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் கார்பந்தய வீரராகவும் ரசிகர் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். தற்போது அஜித் ரேசிங் என்ற பெயரில் சொந்த கார் பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்த அணி துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்று அசத்தி வருகின்றது.

இந்நிலையில், தற்போது அஜித் ஸ்பெயின் கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். பந்தயத்திற்கு முன்பாக அஜித் அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா ஆகிய இருவருக்கும் அஜித்துக்கு முத்தமிட்டு வாழ்த்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஸ்பெயினின் பிரஸ்டீஜஸ் சர்க்யூட் டி பார்ஸிலோனியாவில் நேற்று நடந்த constructed சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் குமார் அணி மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்தது. இந்திய தேசிய கொடியை ஏந்தி அஜித்குமார் உற்சாகத்துடன் ரசிகர்களை நோக்கி நன்றி தெரிவித்தார். ஏற்கனவே துபாயில் நடந்த போட்டியில் இரண்டாவது இடமும், இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடந்த போட்டியில் மூன்றாவது இடமும் அஜித்குமார் அணி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

