Tuesday, March 3, 2026
HomeUncategorizedரஜினியின் 170-வது படத்தை இயக்கும் நடிகர் தனுஷ் !

ரஜினியின் 170-வது படத்தை இயக்கும் நடிகர் தனுஷ் !

அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்க ரஜினி திட்டம் – இயக்கப்போவது யார் தெரியுமா?   தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி, அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.         

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது.    

நடிகர் ரஜினி அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதன்படி ரஜினியின் 169-வது படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினியின் 170-வது படத்தை நடிகர் தனுஷ் இயக்க இருப்பதாக இப்படத்தை ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி  உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments