Wednesday, March 4, 2026
Homeஉலகம்ஜனவரி 5 “தேசிய பறவைகள் தினம்” இன்று!

ஜனவரி 5 “தேசிய பறவைகள் தினம்” இன்று!

மனிதர்களாலும் இயற்கை பேரழிவுகளாலும் அழிந்து வரும் பறவை இனங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் “தேசிய பறவைகள் தினம்” அனுசரிக்கப்படுகிறது.

🌍 பறவைகள் ஏன் அழிந்து வருகின்றன?
▪️ காடுகள் அழிப்பு
▪️ அளவுக்கு அதிகமான ரசாயன பயன்பாடு
▪️ இறைச்சிக்காக பறவைகளை வேட்டையாடுதல்
▪️ பறவைகளை கூண்டுகளில் அடைத்து வளர்ப்பது
▪️ புயல், காட்டுத்தீ, கடல் மாசு
▪️ பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள்

🧪 விளைநிலங்களில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் ரசாயனங்களால்
👉 12% பறவை இனங்கள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளதாக பறவை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

🇮🇳 அதிர்ச்சித் தகவல்

▪️ இந்தியாவில் மட்டும் 1330 அரிய வகை பறவை இனங்கள்
▪️ தமிழகத்தில் 52 வகை பறவை இனங்கள் மட்டுமே உள்ளதாக
தேசிய பறவை ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

🔥 அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீ விபத்து
அரிய வகை விலங்குகள் மற்றும் பறவை இனங்கள்
👉 கொத்து கொத்தாக கருகி, உலக மக்களின் கண்களை கலங்க செய்தது.

🦠 பறவைக் காய்ச்சல் – உலகளாவிய அழிவு

▪️ ஜப்பான் (வட ஹொக்கைடோ) – 2,10,000 பறவைகள்
▪️ நியாகட்டா – 5,50,000 கோழிகள்
▪️ தென் ஹொக்கைடோ – 23,000 வாத்துகள்
▪️ நெதர்லாந்து – 2 லட்சம் வாத்துகள்

👉 இந்தியாவிலும் பறவைக் காய்ச்சல் காலங்களில்

பறவை உயிரிழப்புகள் அதிகமாகவே நிகழ்ந்துள்ளன.

🦚 தேசிய பறவை மயில் – ஆபத்தில்
விவசாய நிலங்களுக்கு சேதம் எனக் கூறி
👉 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்படும் அவலம் தொடர்கிறது.
இதனால் நமது தேசிய பறவையே இன்று அழிவின் விளிம்பில் உள்ளது.

🌱 பறவைகள் – இயற்கையின் காவலர்கள்

பறவைகள் உண்ணும் பழங்களின் விதைகளை
வேறு இடங்களில் வீழ்த்துவதன் மூலம்
👉 மரங்கள் வளர மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

🐦 சீட்டுக்குருவிகள் மறைந்து வருகின்றன
அவற்றை பேணி பாதுகாப்பது
👉 ஒவ்வொருவரின் கடமை.

☀️ சிறிய செயல் – பெரிய மாற்றம்

வரும் கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு
▪️ வீட்டு முன்போ
▪️ மாடியிலோ
👉 ஒரு பாத்திரம் நீர் வையுங்கள்
💧 நீங்கள் வைக்கும் ஒரு துளி நீர் கூட ஒரு பறவையின் உயிரைக் காக்கலாம்.

🌳 பறவை இல்லை → மரம் இல்லை
மரம் இல்லை → மழை இல்லை
மழை இல்லை → மனித குலம் இல்லை!

✊ ஆகவே…
🕊️ பறவைகளை பாதுகாப்போம்
🕊️ பறவைகள் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்துவோம்

இதுவே “தேசிய பறவைகள் தினம்” சொல்லும் செய்தி.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments