சென்னை நந்தனம் திடலில் நடைபெறவுள்ள 49ஆவது புத்தகக் காட்சியில், வாசகர்களுக்கு அனுமதி இலவசம் என பபாசி தலைவர் சண்முகம் அறிவிப்பு.
நாளை ஜனவரி 8ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கும் இந்த புத்தகக் காட்சியில் 1000-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பல துறைசார் அறிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டம் என்றும் தகவல்
முதல்முறையாக இலவச அனுமதி வழங்கப்படுவதால், அனைத்து தரப்பினரும் புத்தகக் காட்சிக்கு வருகை தர வேண்டும் என்பதே பபாசியின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் வாசகா்கள் தங்களது பெயரை பதிவு செய்தால் போதுமானது. இந்தப் பதிவின் மூலம் தினமும் வருகை தரும் வாசகா்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாசகா்களின் வசதிக்காக புத்தகக் காட்சி வளாகத்தில் ஏடிஎம் இயந்திரங்கள், 15 இடங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை ஸ்வைப் செய்யும் வசதிகள், இலவச வைஃபை, கைப்பேசி சார்ஜிங் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாசகா்களை கவரும் வகையில் பிரம்மாண்ட திருவள்ளுவா் சிலை அமைக்கப்பட்டுள்ளதுடன், செல்ஃபி எடுக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

