Wednesday, February 4, 2026
Homeகிளாசிக்தமிழின் முதல் நாளிதழான சுதேசமித்திரன் நாளிதழை வெளியிட்ட ஜி. சுப்பிரமணிய ஐயர் பிறந்த தினம் இன்று!

தமிழின் முதல் நாளிதழான சுதேசமித்திரன் நாளிதழை வெளியிட்ட ஜி. சுப்பிரமணிய ஐயர் பிறந்த தினம் இன்று!

தமிழின் முதல் நாளிதழான சுதேசமித்திரனை வெளியிட்ட ஜி. சுப்பிரமணிய ஐயர் என அறியப்பட்ட கணபதி தீட்சிதர் பிறந்த நாள் இன்று.

இவர் தான் தமிழில் முதல் நாளிதழான சுதேசமித்திரனை வெளியிட்டவர் ஆவார்.

1855ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார். மெட்ராஸ் ஐகோர்ட்டில் சர் டி. முத்துசாமி ஐயரை நியமிக்க ஆதரவாக குரல் கொடுப்பதற்காக தி இந்து என்ற நாளிதழை எம்.வீரராகவாச்சாரியர், டி.டி.ரங்காசாரியார், பி.வி.ரங்காசாரியர், டி.கேசவ ராவ் பண்ட், என்.சுப்பராவ் பன்டுலு ஆகியோருடன் இணைந்து தொடங்கினார் சுப்பிரமணிய ஐயர். முதலில் வார இதழாக தொடங்கப்பட்ட தி இந்து, பின்னர் மூன்று வாரத்திற்கு ஒரு முறையும், அதைத் தொடர்ந்து தின நாளிதழாகவும் மாற்றப்பட்டது.“`

1878 ஆம் ஆண்டிலிருந்து 1898ஆம் ஆண்டு வரை தி இந்து இதழின் ஆசிரியராக இருந்தார் சுப்பிரமணிய ஐயர். சுப்ரமணிய ஐயரின் கட்டுரைகளில் அனல் பறக்குமாம். அந்த அளவுக்கு எழுத்துத் திறமைக் கொண்டவர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவும், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும் தனது நாளிதழைப் பயன்படுத்தினார் சுப்பிரமணிய ஐயர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments