அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கி இருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர், தாங்களாகவே முன்வந்து தங்கள் நாடுகளுக்குத் திரும்ப ஊக்குவிக்கும் வகையில் ‘புராஜெக்ட் ஹோம்மிங்’ (Project Homecoming) என்ற புதிய திட்டத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்காக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) வெளியிட்டுள்ள விளம்பரத்தில், இந்தியாவின் அடையாளமான தாஜ்மகால் புகைப்படத்தைப் பயன்படுத்தி, “இந்தியாவுக்கு இலவசமாகப் பயணம் செய்யுங்கள்” என அழைப்பு விடுத்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தானாக முன்வந்து வெளியேறுபவர்களுக்கு இலவச விமான டிக்கெட் மட்டுமின்றி, தலா 2,600 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹2.16 லட்சம்) ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாயமாக நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கவும், வரி செலுத்துவோரின் பணத்தைச் சேமிக்கவும் இந்த ‘செல்ஃப் டிபோர்ட்டேஷன்’ முறையை அமெரிக்கா கையில் எடுத்துள்ளது.
இருப்பினும், ஒரு நாட்டின் புனிதமான சின்னத்தை நாடு கடத்தும் விளம்பரத்திற்குப் பயன்படுத்தியது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.

